வேதனையில் விவசாயிகள்.. கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்.! தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!! - Seithipunal
Seithipunal


டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை தமிழக அரசின்  அமைச்சர்களோ,  அதிகாரிகளோ இதுவரை பார்வையிடாதது ஏன்? கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அப்போது அமைக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் குழு என்ன ஆயிற்று? 

அவர்கள் அறிக்கை அளித்தார்களா?அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா? இப்போது நெற்கதிர் முற்றி வரும் நேரத்தில் டெல்டா பகுதியில் பெய்த திடீர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாழாகி  இருக்கின்றனவே, இதற்காவது தமிழக அரசு ஏதாவது செய்யுமா?

மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து தேவையான இழப்பீட்டை பெற்றிடுமா? இல்லை; பெயரளவுக்கு "நான்  டெல்டாவைச் சேர்ந்தவன்" என்று சொல்லியே முதலமைச்சர் ஸ்டாலின் காவிரி பாசன  விவசாயிகளை வழக்கம்போல ஏமாற்றப் போகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran tweet for delta farmers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->