அதிமுக கூட்டணி கட்சியை வைத்து அதிர்ச்சி கொடுக்க நினைத்த டிடிவி.. சுதாரித்த எடப்பாடியார்.! வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளது. காங்கிரசுடன் திமுக தனது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது. அதேபோல அதிமுக பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை வந்த சசிகலா அமைதியாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 24ஆம் தேதி சசிகலாவை சரத்குமார், சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட பலர் சந்தித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் திடீரென அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி விலகுவதாக அக்கட்சி தலைவர் அறிவித்தார். அதையடுத்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்த ஐஜேகே மற்றும் மக்கள் சமத்துவ மக்கள் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது என அறிவித்தனர். இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த அமுமுக பொதுக்குழுவில் தினகரனை  முதல்வராக ஆக்குவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும், வாக்கு வங்கி அதிகம் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தினகரன் தெரிவித்துள்ளார், இதையடுத்து சுதாரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமகவுடன் விரைந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தொகுதி பங்கீடு இறுதி செய்தார். அதேசமயம் சமத்துவ மக்கள் கட்சியை அதிமுக கூட்டணியிலிருந்து பிடித்தது போலவே பாமகவையும் பிரிக்க நினைத்த டிடிவி தினகரன் தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran plan for admk alliance party


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->