இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? - வேதனையில் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்து கடனாளியான ஆயுதப்படை காளிமுத்து என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது பலி காளிமுத்து; கடந்த 11 மாதங்களில் 26-ஆவது உயிரிழப்பு. குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர்களைத் தான் தமிழக அரசு பலி கொடுக்கப் போகிறது? என்ற கேள்வியை பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில், 

"ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இன்னொரு உயிர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. கோவையைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் காளிமுத்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சூதாட்டத்தால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? சட்டம் கொண்டுவருவதற்கு குழு அமைத்தார்கள்; அவர்களும் அறிக்கை கொடுத்துவிட்டார்கள்.

எப்போது இதற்கான தீர்வு காணப் போகிறார்கள்? இனியும் தாமதம் வேண்டாம். உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About Online rummy nban july


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->