அதிகாலை வீடுபுகுந்து தூக்கிய காவல்துறை., அய்யய்யோ இபிஎஸ் தான் காரணம், நாங்க இல்லை, டிடிவி தினகரன் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


அதிகாலையில் வீடு புகுந்து அமமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "மெரினா கடற்கரை சம்பவம் குறித்து கழகத்தின் சார்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் முறையான விசாரணை இன்றி கழக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

அதிமுகவில் நடக்கும் அதிகார மோதல், சொந்தக்கட்சி தொண்டர்களையே குண்டர்களை வைத்து தாக்கும் நிலைக்குச் சென்றிருப்பதை நாடறியும். அதையெல்லாம் மறைக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மீது வீண்பழி சுமத்தி, தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். 

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் கழகத்தின் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முறையான விசாரணை எதுவும் நடத்தாமல், சென்னை மாநகராட்சி 114 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு.சுதாகர், 114 மேற்கு வட்ட கழக செயலாளர் திரு.அற்புதராஜ், 63 தெற்கு வட்ட கழக செயலாளர் திரு.மதுசூதனன் ஆகியோரை எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினர் இன்று அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கழக நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

காவல்துறையினர் இப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வது ஏன்? உள்நோக்கத்தோடு வன்முறையைத் தூண்ட முயற்சிக்கும் பழனிச்சாமி அண்ட் கம்பெனிக்கு தமிழக காவல்துறை துணை போவதன் மர்மம் என்ன?" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran say about eps and dmk govt now


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal