யாரையும் நம்ப வேண்டாம்! நாமே களத்தில் இறங்குவோம் என இறங்கிய தினகரன்!  - Seithipunal
Seithipunal


டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிடுங்கள் என அமமுகவினருக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிடுமாறு கழக நிர்வாகிகளையும் உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், நாள்தோறும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் குறைந்தபட்சம் பத்து பேருக்காவது டெங்கு இருப்பது உறுதி செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் மிகவும் கவலை தருகிறது.

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க இதய தெய்வம் அம்மாவின் உண்மையான தொண்டர்களான கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் அனைத்து மாவட்டங்களிலும் நகர, கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நிலவேம்பு கசாயம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை 'காதி கிராப்ட்' போன்ற அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் வாங்கி தயாரித்து விநியோகிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, டெங்கு கொசு உருவாக்கம் மற்றும் அதன் பாதிப்புகளைப் பற்றிய துண்டறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்" என தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran said give nilavembu water to people


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal