ஓட்டுக்கு 30 ஆயிரம் ரூபாய்.. தெருவுக்கு ஒரு அமைச்சர்..! - டிடிவி தினகரன் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிக்கு மக்களிடம் பணம் கொடுத்து வெற்றியை வாங்கியுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "கடந்த 20 மாத திமுக ஆட்சியில் மக்கள் எந்த அளவுக்கு துன்பம் அடைந்துள்ளனர் என்பது உளவுத்துறை மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். அதனால்தான் தெருவுக்கு ஒரு அமைச்சரை நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டார். 

இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் கேள்விப்படாத அளவுக்கு பரிசு பொருட்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 25,000 முதல் 30,000 ரூபாய் வரை சேர்ந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தவறான ஒரு முன்மாதிரி தேர்தலாக தான் நடைபெற்றுள்ளது. அதனை சமாளிப்பதற்காக வெற்றி பெறாமல், வெற்றியை வாங்கிவிட்டு பேசுகிறார். ஈரோடு கிழக்கு தேர்தலில் ஆட்சி அதிகாரம் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஈரோடு கிழக்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இது மக்களிடம் பணம் கொடுத்து வாங்கிய வெற்றியே தவிர மக்களால் வழங்கப்பட்ட வெற்றி அல்ல. இந்த வெற்றி எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது" என செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran accused erode east victory bought with money


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->