திருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை.. அதிர்ச்சியில் பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக செயலாளர் ரகு என்பவரை இன்று காலை 6 மணியளவில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளது. உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செயலாளர் ரகு தற்போது உயிரிழந்தார். 

விஜயகுமாரை கொலை செய்ததாக கூறி லாட்டரி வியாபாரி மீது புகார் கொடுத்துள்ளனர்.  ரகு திருச்சி காந்தி சந்தை பகுதியில் இரு சக்கர வாகனங்களுக்கு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரை ஏற்கனவே இரண்டு முறை முன்விரோதம் காரணமாக லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு, முகமது ஆகியோர் கொலை செய்ய முயற்சித்ததாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த மிட்டாய் பாபு தனது கூட்டாளிகளுடன் இந்த கொலை சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தற்போது காந்தி சந்தையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

trichy bjp leader killed


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->