திமுக அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. அதிமுக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  5.4.2022 - செவ்வாய்க் கிழமை தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை சரமாற்றும் வகையில், சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தம் என்று கடந்த 11 மாத காலமாக திமுக அரசு மேற்கொண்டிருக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 5.4.2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்டத் தலைநகரங்களில் நடத்த இருக்கிறது.

                                   

மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு ஓ. பன்னீர் செல்வம் அவர்கள், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திலும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலும் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல், ரனைய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow admk protest against dmk govt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->