திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

மேலும், தேர்தலுக்கான மனுத்தாக்கல் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. மனுத்தாக்கல் முடிவு தேதி பிப்ரவரி 4ம் ஆகும்.

வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதியும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளை பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று  காணொளி வாயிலாக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today DMK district Secretary Meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal