சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்காக ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அந்த மசோதாவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், இவ்வளவு நாட்கள் காலம் தாழ்த்திய நிலையில், தற்போது திடீரென அந்த மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டு, சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட்டி உள்ளார். இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை காலை 11 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய பன்னிரண்டு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தை பாஜக புறக்கணிப்பதாக ஏற்கனவே நயினார் நாகேந்திரன் அறிவித்துவிட்டார். 

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசுவார்கள். நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதுடன், தமிழக ஆளுநரின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மேலும், சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை மீண்டும் சட்டப் பேரவை சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்றுவது குறித்தும், அதற்கான தேதி குறித்தும் முடிவு செய்து அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today all party meeting in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->