ஈபிஎஸ் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.! - Seithipunal
Seithipunal


இன்று அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தற்போது எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு சாதகமாக அமைந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த அப்பீல் மனுவின் வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவு தடையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று  திங்கட்கிழமை (அக்டோபர் 10) அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.

அதன்படி, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக போடும் பொய் வழக்குகள் மற்றும் ரெய்டுகளை சமாளிக்க திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழு அமைத்தல் மற்றும் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை கண்டித்து போராட்டம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today ADMK MLA and district secretary meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->