திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தமிழக பாஜக புகார்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநர் ரவி குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை காவல்துறை ஆணையருக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரில் "அரசியல் சாசன சட்டத்தின் பாதுகாவலராக விளங்கும் ஆளுநரை தரைக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக பேச்சாளரின் அவதூறு கருத்துகளுக்கு கருத்து சுதந்திரம் என்று கருதக்கூடாது. இதேபோன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பற்றி இழிவான வார்த்தைகளால் பேசப்பட்டால் தமிழக காவல்துறை அதை கருத்து சுதந்திரமாக கருதாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீண்ட காலமாக திமுகவினர் பொது மேடைகளில் தரக்குறைவான பேச்சுக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே தொடர்ந்து இதுபோல் நிகழாத வண்ணம் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கையை  காவல்துறை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இது போன்ற அவதூறு பேச்சுக்களை கண்டும் காணாமல் இருக்கும் காவல்துறையினில் செயலற்ற தன்மை, அவதூறு கருத்துக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக இருந்து வருகிறது என்பதை தமிழக பாஜக தெளிவுபடுத்த விரும்புகிறது" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNBJP complains against DMK Speaker Shivaji Krishnamurthy


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal