சாதனை.. சாதனை.. நேற்று ஒரேநாளில் மதுவிற்பனையில் சாதனை செய்த தமிழக அரசு.! இவ்வளவு கோடிகளா? - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் மதுபான கடைகளில் நேற்று ஒருநாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து மது விற்பனை இதுபோல் அதிக விற்பனை செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.

இந்த நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால், நேற்று ஒரேநாளில் தமிழக அரசின் மதுபான கடைகளில் 217.96 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

தமிழகத்தில் அதிக அளவாக சென்னை மண்டலத்தில் மட்டும் 50 கோடியை 4 லட்சம் ரூபாய்க்கு மதுவகைகள் விற்பனையாகியுள்ளது.

மதுரை மண்டலத்தில் 43 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மதுவகைகள் விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் 42 கோடியே 49 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

கோவை மண்டலத்தில் 41 கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. சேலம் மண்டலத்தில் 40 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மதுவகைகள் விற்பனையாகியுள்ளது. 

மது உடல்நலத்திற்கு.. உயிருக்கு.. சொந்த குடும்பத்துக்கே தீங்கானது. அதுமட்டுமல்லாமல் மது குடிப்பவரால் அந்த நாட்டுக்கே கேடுதான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn tasmac sale report jan 8


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->