தமிழக சபாநாயகர் கனடா பயணம்.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக சபாநாயகர் அப்பாவு, நேற்று கனடா சென்றார்.

கனடா நாட்டின் ஹாலிபேக்ஸ் நகரில், 22 முதல் 26ம் தேதி வரை, 65வது காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாடு நடக்க உள்ளது.

 இதில் தமிழகத்தின் சார்பாக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார். சட்டசபை செயலர் சீனிவாசனும் உடன் செல்கிறார்.

நேற்று இரவு 9:45 மணிக்கு, 'எமிரேட்ஸ்' விமானத்தில், துபாய் சென்றனர். அங்கிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் சென்று, பின், கனடாவின், ஹாலிபேக்ஸ் நகருக்கு செல்ல உள்ளனர். மாநாடு முடிந்து, இருவரும் செப்., 1ல் சென்னை திரும்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN sabanayagar travelling to Canada


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->