சேப்பாக்கத்தில் உதயநிதி முன்னிலை; கொளத்தூரில் ஸ்டாலின் தலையில் இடியை இறக்கிய விஜய்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் திமுக தரப்பில் கலவையான முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

நட்சத்திரத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார்,. ஆரம்பத்திலிருந்தே தவெக வேட்பாளர் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்து முன்னிலையில் பெற்று வந்தார்.

இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்று உள்ளார்.

இருப்பினும், ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உற்றுநோக்க வைக்கும் அதிர்ச்சித் தகவல் கொளத்தூர் தொகுதியிலிருந்து வெளியாகியுள்ளது.

திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், தான் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த தனது சொந்தக் கோட்டையிலேயே கடும் சவாலைச் சந்தித்து வருகிறார்.

ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் அவர் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறார். அங்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் முன்னிலை வகித்து வருவது மிகப்பெரிய அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. திமுக தலைவர், முதல்வரே இப்படி பின்னடைவைச் சந்திப்பது திமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Elections 2026 Udhayanidhi Leads in Chepauk while CM Stalin Faces Shocking Trail in Kolathur


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->