தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026; அதிமுகவின் கோட்டையான கோவையில் 05 தொகுதிகளில் தவெக ஆதிக்கம்..! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் கோட்டையான கோவையின் 10 தொகுதிகளில் இன்று (மே 4) மதியம் நிலவரப்படி, தவெக 05 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, கோவையில் சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம், சூலூர், கோவை வடக்கு ஆகிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முதல் சுற்றில் இருந்தே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளை உள்ளடக்கிய கிணத்துக்கடவு தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளர் விக்னேஷ் முன்னிலையில் பெற்று வருகிறார்.

அவருக்கு அடுத்து திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன் 02-வது இடத்தில் உள்ளார். அடுத்து, கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் பின்னடைவில் இருந்தார். 3-வது சுற்றில் இருந்து அவர் முன்னிலை பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் 02-வது இடத்தில் உள்ளார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சூரியபிரகாஷ் 03-வது இடத்தில் உள்ளார்.

சிங்காநல்லூர் தொகுதியில் 10-வது சுற்றின் முடிவில், தவெக வேட்பாளர் ஸ்ரீகிரி பிரசாத் முன்னிலையில் உள்ளார். சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் 23,116 வாக்குகளும், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி 22,028 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

சூலூர் தொகுதியில் 10-வது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் சுகுமார் பெற்று முன்னிலையில் உள்ளார். சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி 02-வது இடத்தில் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Dominates in 5 Constituencies in Coimbatore an AIADMK Stronghold


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->