'புதுச்சேரி அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்கும்'; உப்பளம் தொகுதி வெற்றிப்பெற்ற அன்பழகன் பேட்டி..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளது. இந்த அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்கும் என்று மாநிலச் செயலர் அன்பழகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் உப்பளம் தொகுதியில் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் அன்பழகன் பேசும் போது கூறியதாவது; ''நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 06வது முறையாகப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. மேலும், புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்க போகிறது.

அந்த ஆட்சியின் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதற்கு எங்கள் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி வாயிலாக அனுமதி கேட்போம். யாரும் தர்மத்துக்காகக் கட்சி நடத்துவதில்லை. மேலும், புதுச்சேரியைப் பொறுத்தவரை முதல்முறையாக வெற்றி பெற்றவர்கள்கூட சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சராகப் பதவி வகித்துள்ளனர்.

05-வது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்னை வேறு கட்டத்துக்கு உயர்த்த வேண்டும் என்று கூட வாக்கு அளித்து இருக்கலாம். அதற்காகத் தொகுதி மக்களுக்கு உறுதுணையாக பணியாற்றுவேன்''. என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anbazhagan states in an interview that the AIADMK will seek a berth in the Puducherry Cabinet


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->