105-க்கும் அதிகமான இடங்களில் தவெக முன்னிலை: மகன் விஜய்யின் வெற்றியால் தாய் பெரும் மகிழ்ச்சி!
TVK Leads in 105 Seats Vijays Parents Celebrate Historic Election Trends
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 105-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று, மாநிலத்தின் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தை விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா ஆகியோர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மகனின் தேர்தல் வெற்றியைப் பற்றிப் பேசிய ஷோபா, "I am so Happy" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது அருகில் இருந்த சந்திரசேகர், "ஷோபா விஜய்யின் தாய் மட்டுமல்ல, அவர் தான் விஜய்யின் முதல் விசிறியும் கூட; அதனால் அவர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
திரையுலகில் இருந்து அரசியலில் காலடி எடுத்து வைத்த விஜய்க்கு, முதல் தேர்தலிலேயே கிடைத்துள்ள இந்த வரவேற்பு அவரது குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
TVK Leads in 105 Seats Vijays Parents Celebrate Historic Election Trends