மதுரை கிழக்கு: தவெக வேட்பாளர் முஸ்தபா அபார வெற்றி; பிடிஆர், இயக்குநர் சுந்தர் சி தோல்வி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தென் தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதியான மதுரை கிழக்கில் ஒரு மிகப்பெரிய அரசியல் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் களம் கண்ட முஸ்தபா, தனது பலமான எதிரிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதியில் ஆளும் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னணி அமைச்சர்களில் ஒருவரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரபலத் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி ஆகிய இருவருமே தோல்வியைத் தழுவியுள்ளனர்.

அறிவுசார் அரசியலுக்குப் பெயர் பெற்ற பி.டி.ஆர் மற்றும் திரைத்துறையில் பிரபலமான சுந்தர் சி ஆகியோரை எதிர்த்து, ஒரு புதிய கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது மதுரை அரசியல் களத்தில் தவெக-வின் அசுர வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVKs Mustafa Wins Madurai East Major Upset for PTR and Director Sundar C


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->