தமிழநாட்டில் வன்முறை இன்றி மிகவும் அமைதியாக புரட்சி நடைபெற்றுள்ளது - கார்த்தி சிதம்பரம்! - Seithipunal
Seithipunal


திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய்யின் தவெக வாக்கு எண்ணிக்கையில் 110 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில்,  திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரன் மகன் கார்த்தி சிதம்பரம் வெளியுட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் அமைதியான முறையில் Reformasi, Aragalaya, Arab Spring, July Uprising, and Jana Andolan III போன்ற புரட்சி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பதிவில்,.

Reformasi - இந்தோனேசியாவில் 1998 இல் 30 ஆண்டுகளாக அதிபர் ஆட்சிக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டத்தின் பெயர். இதன்பின் அங்கு ஜனநாயகம் துளிர்த்தது

Aragalaya - இலங்கையில் 2022 இல் பொருளாதார வீழ்ச்சியால் அதிருப்தியடைந்த மக்கள் முன்னெடுத்த போராட்டம். அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை நாட்டை விட்டு ஓட வைத்த மக்கள் புரட்சி இது.

Arab Spring - அரபு நாடுகளில் பரவிய சர்வாதிகாகராக ஆட்சியை அகற்றும் மக்கள் புரட்சி அரபு வசந்தம் அழைக்கப்படுகிறது.

July Uprising - ஷேக் ஹசீனாவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக 2024 இல் மக்கள் நடத்திய போராட்டம் ஆகும்.

Jana Andolan III - நேபாளத்தில் சர்மா ஒலி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக வெடித்த ஜென் z இளைஞர்களின் புரட்சி ஆம்.

இவை அனைத்தும் வன்முறையோடு கலந்தே நடைபெற்றது. ஆனால் தமிழநாட்டில் வன்முறை இன்றி மிகவும் அமைதியாக இதுபோன்றதொரு புரட்சி நடைபெற்றுள்ளது" எனகார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress karthik chidambaram wish tvk


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->