தமிழகத் தேர்தல் 2026: பெரும்பான்மையை நெருங்கும் தவெக; வெற்றிச் சான்றிதழ் பெறச் செல்கிறார் விஜய்!
TN Election Results 2026 Vijays TVK Nears Majority Set to Receive Victory Certificate
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. தற்போதைய முன்னிலை நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 113 இடங்களில் முன்னிலை வகித்து, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை நெருங்கியுள்ளது.
கட்சித் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தனது முன்னிலையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளார். தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தனது வெற்றிச் சான்றிதழைப் பெறுவதற்காக விஜய் சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்கிறார்.
அங்கு சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவர் அடையாறில் உள்ள தனது பெற்றோரைச் சந்தித்து ஆசி பெறத் திட்டமிட்டுள்ளார். தவெக-வின் இந்த அதிரடி முன்னிலை தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உறுதி செய்துள்ளது.
English Summary
TN Election Results 2026 Vijays TVK Nears Majority Set to Receive Victory Certificate