கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு! ஆறாவது சுற்று முடிவிலும் விஜய் கொடுத்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. 

காலை 10:30 மணி நிலவரப்படி, யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 102 இடங்களில் முன்னிலை பெற்று மாநிலத்தின் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. அதிமுக கூட்டணி 81 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஆளும் திமுக கூட்டணி 51 இடங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தக் கோட்டையான கொளத்தூர் தொகுதியில் ஆறாவது சுற்று முடிவிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். 

தற்போதைய நிலவரப்படி, தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 19,804 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின் 17,975 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். 

இதுவரை எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், மும்முனைப் போட்டியில் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Election Results 2026 TVK Surges Past 100 Mark Stalin Trails in Kolathur After Round 6


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->