இதுவரை இல்லாத அரசியல் நெருக்கடி! கொளத்தூரில் 6-வது சுற்றிலும் ஸ்டாலின் பின்னடைவு...! - மகுடம் யாருக்கு...?
Unprecedented political crisis Stalin defeat 6th round Kolathur Who get crown
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சீராக நிறைவு பெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் தீவிரமான அரசியல் எதிர்பார்ப்புகளுடன் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிந்த வாக்குகள் சுற்று முறையில் திறந்து கணக்கிடப்பட்டு வருகின்றன.

தொகுதிவாரியான முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலுவான முன்னிலைப் பிடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டாம் இடத்திலும், திராவிட முன்னேற்ற கழகம் மூன்றாம் நிலைப்பாட்டிலும் திகழ்கின்றன.
காலை 10.30 மணி நிலவரப்படி, 234 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 102 இடங்களில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி 81 இடங்களில், திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி 51 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
இதுவரை எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலை தொடர்கிறது.இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற 6வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அங்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் பாபு 19,804 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்; அதேசமயம் மு.க. ஸ்டாலின் 17,975 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.
மேலும், வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை வகித்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Unprecedented political crisis Stalin defeat 6th round Kolathur Who get crown