மீண்டும் எழுகிறதா புதிய தமிழகம்...? - ஓட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி முன்னிலை...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக ஒழுங்காக நிறைவு பெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பரபரப்பான அரசியல் சூழலில் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

வழக்கமான நடைமுறையின்படி முதலில் தபால் வாக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிந்த வாக்குகள் சுற்று முறையில் திறந்து கணக்கிடப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வெற்றிக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் 5 சுயேட்சை போட்டியாளர்கள் என மொத்தம் 13 பேர் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி நடைபெற்ற 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 4,520 வாக்குகள் பெற்று முன்னிலைப் பிடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மதன் ராஜா 4,269 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அதேபோல், திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர் ராமஜெயம் 2,814 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் திகழ்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் சுந்தரராஜ் 2,793 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.

மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனுசியா 1,061 வாக்குகள் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Tamil Nadu rising again Dr Krishnasamy takes dramatic lead Ottapidaram


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->