திண்டுக்கல் வேளாண் பெருமக்களின் கோரிக்கை., உடனே உத்தரவிட்ட தமிழக முதல்வர்! - Seithipunal
Seithipunal


வரதமாநதி அணையிலிருந்து வரும் 6-ம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 

"திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, வரதமாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக 6.11.2020 முதல் 120 நாட்களுக்கு பழனி வட்டம், பாப்பன்கால்வாய், பெரிய வாய்க்கால், பழனி வாய்க்கால் மற்றும் 18 பாசன குளங்களின் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 5523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm order to varathamaadevi dam open


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal