#BiGBreaking: பாமக தீவிர போராட்டம் எதிரொலி., சற்றுமுன் அன்புமணியை சந்தித்தார் தமிழக முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்திருக்கிறார்கள். 

அதன்படி முதற்கட்டமாக இன்று (01.12.2020) காலை 11.00 மணிக்கு  சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

சென்னையின் 6 நுழைவாயில்களிலும் சுமார் 5000 போலீசார் பாமகவினரை சென்னையினுள் விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், அன்புமணி இராமதாஸை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM meet TO AMR


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->