2026ல் இந்தியாவில் ஸ்கோடா வெளியிடும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மூன்று கார் மாடல்கள் இவை தான்! - Seithipunal
Seithipunal


2026ம் ஆண்டில் இந்தியாவில் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே 2025ம் ஆண்டில் கோடியாக் ப்ரீமியம் எஸ்யூவி மற்றும் ஆக்டேவியா RS பெர்ஃபாமன்ஸ் செடான் ஆகியவற்றை இந்திய சந்தையில் ஸ்கோடா வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து 2026ல் முக்கிய அப்டேட்கள் மற்றும் புதிய மாடல்கள் வரவுள்ளன.

ஸ்கோடாவின் மாஸ் மார்க்கெட் மாடல்களில் ஒன்றான குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி, 2021க்குப் பிறகு பெரிய அப்டேட் பெறவில்லை. தற்போது 2026ல் இந்த காருக்கு பெரிய ஃபேஸ்லிப்ட் அப்டேட் கிடைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய குஷாக்கில் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் பெரிய டிசைன் மாற்றங்கள் இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக லெவல் 2 ADAS வசதி, அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படலாம். இன்ஜின் விருப்பங்களில் மாற்றம் இருக்காது. 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்களே தொடரும். தற்போதைய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்குப் பதிலாக 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த ஃபேஸ்லிப்ட் மாடல் 2026 முதல் காலாண்டில் வெளியிடப்படலாம்.

அதேபோல், மிட்-சைஸ் செடான் பிரிவில் ஸ்கோடாவின் ஸ்லாவியா மாடலுக்கும் 2026ல் பிரதான அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற கார்கள் போட்டியிடும் இந்த பிரிவில், ஸ்லாவியாவுக்கு முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் புதிய டிசைன் மாற்றங்கள் வழங்கப்படலாம். மெக்கானிக்கலாக மாற்றமில்லை என்றாலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் 6 ஸ்பீடிலிருந்து 8 ஸ்பீடாக மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த மாடலில் லெவல் 2 ADAS வசதி பிரதான அப்டேடாக இருக்கும். 2026ன் நான்காம் காலாண்டில் ஸ்லாவியா ஃபேஸ்லிப்ட் ரூ.10 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை விலையில் அறிமுகமாகலாம்.

இதற்கிடையில், ஸ்கோடாவின் புதிய மின்சார கார் மாடலாக எல்ராக் (Elroq) எஸ்யூவி இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் இந்திய வெளியீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஹூண்டாய் அயானிக் 5, BMW iX1 LWB போன்ற ப்ரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இந்த மாடல் இருக்கும். ஐரோப்பாவில் 52 kWh, 59 kWh மற்றும் 77 kWh பேட்டரிகளுடன் மூன்று வேரியன்ட்களில் எல்ராக் விற்பனை செய்யப்படுகிறது. டாப் வேரியன்ட் ஒரே சார்ஜில் 560 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டது. இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி சுமார் ரூ.45 லட்சம் விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

These are the three new and improved car models that Skoda will launch in India in 2026


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->