விஜயின் பேச்சால் கொந்தளிக்கும் அதிமுக; களத்தில் இல்லாத கட்சியா? அடித்து துவைக்கும் அதிமுகவினர்! குஷியில் திமுக! - Seithipunal
Seithipunal


திமுக எதிர்ப்பை பிரதான ஆயுதமாகக் கொண்டு தமிழக அரசியலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய், சமீப கால பேச்சுகளால் அதிமுக முகாமில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார். ‘களத்தில் இல்லாதவர்கள்’ என்ற சொற்றொடரை பயன்படுத்தி சில கட்சிகளை புறம் தள்ளிப் பேசியதாக கூறப்படும் நிலையில், 50 ஆண்டுகளைக் கடந்த அதிமுக இயக்கத்தையே விஜய் மறைமுகமாக ஒதுக்குகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் அடையாளங்களை தவெக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து முக்கிய கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் விஜயும் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 18ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால் பாஜக, அதிமுக குறித்து அவர் வெளிப்படையாக பேசவில்லை. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், “களத்தில் இல்லாத கட்சிகளைப் பற்றி பேச தேவையில்லை” என்று அவர் கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்த பேச்சு நாம் தமிழர் கட்சியை நோக்கி இருந்ததாக சிலர் கருதினாலும், அதிமுகவினர் இதை தங்கள் மீது வைத்த மறைமுக தாக்குதலாக பார்க்கின்றனர். திமுக – தவெக இடையேதான் பிரதான போட்டி என்ற தோற்றத்தை உருவாக்கி, அதிமுகவை அரசியல் களத்தில் இருந்து புறம் தள்ள முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய அதிமுக தலைவர்களின் பெயர்களையும் படங்களையும் விஜய் மேடைகளிலும் பதாகைகளிலும் பயன்படுத்துவது, கட்சியின் அடையாளங்களை அபகரிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

அதிமுக பிளவுபட்டுள்ளது, பலம் குறைந்துள்ளது என்ற விமர்சனங்கள் இருந்தபோதும், 2024 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி 23.5 சதவீத வாக்குகளை தக்கவைத்தது. இந்த வாக்கு வங்கி தனிநபர் பிரச்சாரத்தால் உருவானது அல்ல; எம்ஜிஆர் – ஜெயலலிதா என்ற அரசியல் மரபும், இரட்டை இலை என்ற சின்னமும் இணைந்து உருவாக்கிய ஆதரவு என்பதே பொதுவான கணிப்பு.

அண்ணாவும் எம்ஜிஆரும் காலகட்ட மாற்றத்தை ஏற்படுத்திய தலைவர்கள். அதே வரிசையில் புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கப்போகிறோம் என விஜய் கூறி வருகிறார். ஆனால், “எம்ஜிஆர் படம் காட்டியவுடன் பின்னால் வரும் கூட்டம் அதிமுக தொண்டர்கள் அல்ல” என்பதே அக்கட்சியின் உறுதியான நிலைப்பாடு. இதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களாக கருதப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையே தொண்டர்கள் நிராகரித்துள்ள நிலையில், வெறும் பெயர் மற்றும் படங்களால் அதிமுக ஆதரவை கைப்பற்ற முடியாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியை “களத்தில் இல்லாத கட்சி” என்ற தொனியில் விஜய் பேசியது அதிமுக முகாமில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சு தொடர்ந்தால், அதிமுக இனி அமைதியாக இருக்காது என்றும், விஜய்க்கு எதிராக நேரடியான அரசியல் தாக்குதல்கள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தவெக – அதிமுக மோதல் அதிகரித்தால் அதன் பலன் திமுகவுக்கே செல்லும் வாய்ப்பு அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK is in turmoil due to Vijay speech Is it a party that is not in the field AIADMK is beating and washing DMK is happy


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->