தமிழகத்தில் மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரை நடத்தபோகும் பாஜக! வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அமைதிக்கு எதிராகச் செயல்பட்டும் தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடாரமாகவும் அடைக்கல பூமியாகவும், தொடர்ந்து ஊக்கமளித்த பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு இறுதி முடிவுகட்டும்வகையில் நம் இந்தியா தேசம் தீவிரத்தாக்குதல் நடத்தியுள்ளது.

கோழைகளைப் போல ராணுவ உடையில் வந்தது. அப்பாவிப் பொதுமக்களை பஹல்காமில் கொன்ற கொலைகார்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் தீவிரவாத பயிற்சிக்கூடங்களுக்கும். பாதுகாப்பு மையங்களுக்கும். நமது ஆயுதப்படைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக பலத்த சேதங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீரத்துடனும், விவேகத்துடனும் வித்தகத்துடனும் வேகத்துடனும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய நமது ஆயுதப்படைகளையும் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில் அடுத்த சில நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்திட செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த யாத்திரைகள் நாட்டிற்காக நாட்டு மக்களால் நான்கு கட்டங்களாக நடைபெறும்.

1. மாநிலத் தலைநகரம் சென்னையில் மே 14-ஆம் தேதியும்

2. இதர முக்கிய நகரங்களில் மே 15ஆம் தேதியும்

3. மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16 மற்றும் 17-ஆம் தேதியும்

4. சட்டசபைத் தொகுதிகள் தாலுகாவின் ஊர்கள் பெரிய கிராமங்கள் ஆகிய இடங்களில் மே 18 முதல் 23-ஆம் தேதி வரையும் நம் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்த ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டுதல்கள் தலைமையிலிருந்து தொடர்ந்து வழங்கப்படும். நம் வீரர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் நம் நாட்டின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் தயவுசெய்து பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நம் நாட்டு மக்களின் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பெரிய அளவில் யாத்திரைகளை ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். 

Operation Sindoor BJP Nainar Nagendran 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN BJP Yatra announce


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->