பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன்? – விருப்பமனு தாக்கல், முக்கிய தலைவர்களின் ஆதரவு!
TN BJP Leader may Be Nayinar Nakenthiran
தமிழக பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனது விருப்பமனுவை இன்று அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.
பாஜகவில் எந்தவொரு பதவியும் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவரது பதவிக்காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும், 10 மூத்த தலைவர்களின் பரிந்துரை கட்டாயம் என்றும் விதிமுறைகள் வரையறுக்கப்பட்டிருந்தன.
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில், நயினார் நாகேந்திரன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
பாஜக வட்டாரங்களில், நயினார் நாகேந்திரனின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவது உறுதி என்று கருதப்படுகிறது. புதிய மாநிலத் தலைவராக அவர் பொறுப்பேற்கும் வாய்ப்பு மிக அதிகம் என்று கூறப்படுகிறது.
English Summary
TN BJP Leader may Be Nayinar Nakenthiran