மோடியை தீர்த்துக்கட்ட வேண்டும்... பகிரங்க கொலை மிரட்டல் விடும் ரவுடிகளின் கூடாரம்தான் திமுக - பாஜக கடும் கண்டனம்!
TN BJP condemn to DMK MK Stalin PM Modi murder thread
தமிழக பாஜக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், உலக நாடுகள் போற்றும் உன்னத் தலைவரான நமது பாரதப் பிரதமருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டும் விடும் ரவுடிகளின் கூடாரம்தான் திமுக. இப்படிப்பட்ட ஒரு கட்சி அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய கள்ளிச்செடி" என்று தெரிவித்துள்ளது.
இதேபோல் பாஜக நிர்வாகி எஸ்ஜே சூர்யா விடுத்துள்ள கண்டன செய்தியில், "மோடியை தீர்த்து கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும்" என்று பொதுமேடையில் கொலை மிரட்டல் விடுக்கும் தென்காசி தெற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் திரு.ஜெயபாலனுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?
பாரதத்தை உலக அரங்கில் தலைநிமிரச் செய்யும் "வளர்ச்சி நாயகன்" பிரதமர் மோடியைப் பார்த்து கொலை மிரட்டல் விடுப்பதா?
ஊழல், நிர்வாக சீர்கேடு, கஞ்சா கலாச்சாரம் என தமிழகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கும் முக ஸ்டாலின் தலைவராக வைத்துக்கொண்டு, தேசத்திற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த உழைப்பின் சிகரம் மோடியைப் பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?
நாட்டின் பிரதமரை கொலை செய்யத் தூண்டும் வகையில் ஒருவன் பேசுகிறான், அதை மேடையில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்காசி MP திருமதி.ராணி ஸ்ரீகுமார் மற்றும் சங்கரன்கோவில் MLA திரு.E.ராஜா ஆகியோர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேசத்துரோகப் பேச்சுக்கு கைதட்டவா நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள்?
தி.மு.க-வின் அராஜக அரசியல் எல்லை மீறிவிட்டது.
காவல்துறையே, வேடிக்கை பார்த்தது போதும். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, பிரதமரின் உயிருக்கே அச்சுறுத்தல் விடுத்த திரு.ஜெயபாலனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்! இல்லையேல் விளைவுகள் விபரீதமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TN BJP condemn to DMK MK Stalin PM Modi murder thread