தமிழக பாஜக தலைமை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு.! தலைவர் இவர் தான்.!  - Seithipunal
Seithipunal


பாஜக தமிழக சட்டப்பேரவைத் தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை பாஜக சட்டப்பேரவைத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இவர் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

இன்று பாஜக தமிழக சட்டப்பேரவை தலைவராக சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக சென்னை கமலாலயத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருநெல்வேலி தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வதி, நாகர்கோவில் தொகுதியின் எம்எல்ஏ காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் ஒருமனதாக பாஜக தமிழக சட்டப்பேரவைத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly bjp head


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->