இடைத்தேர்தல்: தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு - ஜி.கே.வாசன் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி தனது முழு ஆதரவை அளிப்பதாகத் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செப்டம்பர் 24, 2026 அன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: "தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துத் துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாகப் புதிய தவெக அரசு விளங்கி வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தைத் தந்துள்ளனர். பெருந்தலைவர் காமராஜரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படும் தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய், மக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாகக் குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்துள்ளார்" என்று பாராட்ட தெரிவித்துள்ளார்.

மேலும், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்ப வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே புதிய தவெக அரசின் தூய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) ஆதரவளிப்பதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TMC Extends Support to TVK Alliance in Madurantakam and Dharapuram By-Elections: GK Vasan


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->