'வாகை சூடும் நேரம் வந்துவிட்டது'...'வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள்'...! - தவெக தலைவர் விஜய் - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய் தலைமையில் வெளியான உற்சாகமூட்டும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,"என் இதயத்தில் குடியிருக்கும் அன்புத் தோழர்களே, உங்களுக்கு என் உளமார்ந்த வணக்கங்கள்! வாகை சூடும் வெற்றிக் காலத்தை மீண்டும் எழுதும் இந்த வரலாற்றுப் பயணத்தில், உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளவிட முடியாத சக்தியாக திகழ்கிறது.

மாற்றத்தின் முன்னணி சக்தியாக நாமே உருவெடுத்து, வெற்றியின் பாதையில் உறுதியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.தேர்தல் நாளை நோக்கி காலம் வேகமாக நகரும் இந்த தருணத்தில், ஒரு மனமார்ந்த அழைப்பு: வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என் நண்பர், நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கி உற்சாகமாக பணியாற்றுங்கள்.

அடுத்த பத்து நாட்களில், உங்கள் வசதிக்கேற்ற நேரங்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்கள் வாழும் பகுதிகளில் வீடு தோறும் சென்று தமிழ்நாட்டு மக்களை நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு ‘விசில்’ சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் வையுங்கள்.

இந்தப் பணியில் தன்னார்வலர்களாக இணைந்து, வெற்றிப் பயணத்தை வலுப்படுத்துங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மாநிலம் முதல் அனைத்து நிலை மாவட்ட நிர்வாகிகளும், நமது வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஒற்றுமை, அர்ப்பணிப்பு, மற்றும் தோழமை உணர்வுடன் செயல்பட்டு, வீடு தோறும் மக்களை அணுகுங்கள்.

இந்தத் தேர்தல் வெறும் போட்டி அல்ல; இது ஒரு தலைமுறையின் மாற்றத்தை உருவாக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் என்பதை மக்களிடம் தெளிவாக எடுத்துரையுங்கள்.

தன்னலமற்ற உழைப்பின் மூலம் நமது வெற்றிப் பயணத்திற்கு வலுசேருங்கள்.ஜனநாயகத்தை நிலைநாட்டும் இந்தப் போராட்டத்தில், வெற்றியின் பேரணியாக தமிழகம் முழுவதும் ஒன்றுபட்டு, உண்மையான மக்களாட்சியை உருவாக்குவோம்! வாகை சூடும் வரலாறு மீண்டும் மலர்கிறது! நல்லதே நடைபெறும்! வெற்றி நிச்சயம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

time come warm up Go from house house and meet people Tvk leader Vijay


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->