'ஓட்டு போட வேண்டாம்'...! - மக்களை அவமதித்த எம்.எல்.ஏ மீது அண்ணாமலை கடும் தாக்கு...! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது,"மணச்சநல்லூர் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களுடன் நடந்து கொண்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கிராம ஏரியில் தண்ணீர் வசதி இல்லை என்று மனவேதனையுடன் கோரிக்கை வைத்த மக்களை, அவர் இழிவாகப் பேசியதுடன், “எனக்கு ஓட்டு போட வேண்டாம்” என அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுவாக தேர்தல் முடிந்த பின்னரே திமுக நிர்வாகிகள் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவார்கள் என கூறப்பட்டாலும், இம்முறை தேர்தல் பரப்புரைக்காலத்திலேயே பொதுமக்களுக்கு மரியாதை அளிக்காத நிலை உருவாகியுள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுமக்களின் நம்பிக்கையை புறக்கணித்ததாக குற்றம்சாட்டிய அவர், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும், அடிப்படை தேவையான ஏரி சீரமைப்பு கூட செய்ய முடியவில்லை என்று சாடியுள்ளார்.

அதே நேரத்தில், தனிப்பட்ட ஆடம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு, மக்களின் நலனை நினைக்க நேரமில்லை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தத் தேர்தலில், திமுக சட்டமன்ற உறுப்பினரின் ஆணவத்திற்கும், திமிருக்கும் மணச்சநல்லூர் மக்கள் தகுந்த பதிலை வழங்குவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont vote Annamalai strongly attacks MLA who insulted people


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->