இது வெறும் ஆரம்பம் அல்ல, அதிரடி மாற்றம்! 34.92% வாக்குகளுடன் தவெக விஸ்வரூபம்..! - திணறிப்போன திமுக, அதிமுக-வின் வாக்கு வங்கி எவ்வளவு...? - Seithipunal
Seithipunal


இந்திய அரசியல் வரலாற்றில், புதிதாக உருவான ஒரு கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் பேராதரவை பெற்று ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றுவது அபூர்வ சாதனையாக மதிக்கப்படுகிறது. அந்த அரிய வரிசையில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு பின் தற்போது விஜய் தனது பெயரை பதித்துள்ளார்.

தி.மு.க.விலிருந்து பிரிந்து 1972-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வை நிறுவிய எம்.ஜி.ஆர், 1977-இல் நடந்த பொதுத்தேர்தலில் முதல்முறையாக களம் கண்டார். அப்போது 155 தொகுதிகளில் போட்டியிட்டு 130 இடங்களில் வெற்றி பெற்று, 30.36 சதவீத வாக்குகளுடன் தனித்துவமான பெரும்பான்மையை நிறுவி ஆட்சியை அமைத்தார்.

அதேபோல், 1983-இல் ஆந்திர அரசியலில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது. வெறும் 9 மாதங்களில் கட்சியை உருவாக்கி, என்.டி.ஆர் தலைமையிலான தெலுங்கு தேசம் 289 தொகுதிகளில் போட்டியிட்டு 201 இடங்களில் வெற்றி பெற்று, 46.30 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் ஆதிக்கத்தை முறியடித்தது.

ஊழலுக்கு எதிரான மக்கள் எழுச்சியின் பலனாக 2012-இல் உருவான ஆம் ஆத்மி கட்சி, 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்று 29.49 சதவீத வாக்குகளைப் பெற்றது. முழுமையான பெரும்பான்மை இல்லாதபோதிலும், காங்கிரசின் வெளிப்புற ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த வரிசையில் தற்போது நான்காவது இடத்தை விஜய் பிடித்துள்ளார். 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தனது கட்சியுடன், வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே முதல் சட்டமன்றத் தேர்தலை சந்தித்து 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்று, த.வெ.க.வை முக்கிய அரசியல் சக்தியாக உயர்த்தியுள்ளார்.

மேலும், பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கில் 27,416 வாக்குகள் வித்தியாசத்திலும் விஜய் கணிசமான வெற்றியை பதிவு செய்துள்ளார். மாநிலம் முழுவதும் 34.92 சதவீத வாக்குகளைப் பெற்று த.வெ.க. முன்னணியில் திகழ்கிறது.

அதனைத் தொடர்ந்து 24.19 சதவீத வாக்குகளுடன் தி.மு.க. இரண்டாம் இடத்திலும், 21.21 சதவீத வாக்குகளுடன் அ.தி.மு.க. மூன்றாம் இடத்திலும் நிலைகொண்டுள்ளன.தனிப்பெரும்பான்மை எட்டப்படாத நிலையிலும், பிற கட்சிகளின் ஆதரவு கிடைக்கப்போகிறது என்பதால், விஜய் முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This not just beginning it dramatic change Tvk Vishwaroopam 34point92 percentage votes How much vote bank struggling DMK and AIADMK


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->