இதுதான் பிளான்.. 50 தொகுதிகள்..விஜய்க்கு எதிராக தயாராகும் நாதக! கணக்கு போட்டு களமிறங்கும் சீமான்! - Seithipunal
Seithipunal


2026 சட்டசபைத் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தங்களுக்குச் சாதகமான 50 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அந்த தொகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலிலிருந்து பிரச்சார வரைபடம் வரை அனைத்தையும் திட்டமிட்டு வைத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில், சீமான் தலைமையிலான குழு 50 முக்கிய தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் கட்சியின் வலுவை மேலும் பலப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில், வேதாரண்யம், திருச்சி, மதுரை, இராமநாதபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இடம்பெற்றுள்ளன.

சீமான், ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வரவிருக்கும் பிப்ரவரி மாத திருச்சி மாநாடு, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்க மேடையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சீமான் தனது 59வது பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 3,000 பேருக்கு அசைவ விருந்து அளித்துள்ளார். இதனால் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நாதக வாக்கு வலிமையை இரட்டிப்பாக்கும் திட்டங்கள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருமாறியது. இதனை அடுத்த கட்டமாகக் கொண்டு, வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை இரட்டை இலக்கத்தில் கொண்டு செல்வது, மற்றும் குறைந்தது சில தொகுதிகளில் வெற்றி பெறுவது சீமானின் முக்கிய இலக்காக உள்ளது.

மேலும், இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களை தங்கள்பக்கம் ஈர்க்கும் நோக்கில், சமூக வலைதளங்கள் மற்றும் கிராமப்புற பிரச்சாரங்கள் வழியாக கட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக எழுச்சி குறித்து சீமான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தவெக வாக்கு வங்கியைப் பாதிக்கக்கூடும் என்ற காரணத்தால், நாம் தமிழர் கட்சி கிராமங்களை நோக்கிய நேரடி பிரச்சாரத்திற்குத் திரும்பியுள்ளது.

மொத்தத்தில், 2026 தேர்தலை நோக்கி நாம் தமிழர் கட்சி மிகுந்த சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறது.
“50 தொகுதிகளில் வேரூன்றி வெற்றி பெறுவது தான் எங்கள் முதல் இலக்கு” என சீமான் நிர்வாகிகளிடம் கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திமுக – அதிமுக மோதலில் மூன்றாவது வலுவான சக்தியாக நாம் தமிழர் கட்சி எழுவது நோக்கில்,
சீமான் தலைமையில் கட்சி தேர்தல் அரங்கில் முழு வேகத்துடன் களமிறங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is the plan 50 seats Nathaka is preparing to fight Vijay Seeman is making calculations and entering the fray


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->