திருவாரூர் மருத்துவரிடம் சிபிஐ என்று மிரட்டி ஒரு கோடியே 19 லட்சம் ரூபாயை பறித்த மர்ம குமபல்!
Thiruvarur CBI Fake call money robbery
மருத்துவரிடம் நாங்கள் சிபிஐ என்று மிரட்டி ஒரு கோடியே 19 லட்சம் ரூபாயை மர்ம குமபல் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஒரு மருத்துவருக்கு மர்ம நபர்கள் வீடியோ அழைப்பு (Video Call) மூலம் தொடர்பு கொண்டனர்.
தாங்கள் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி, ஆவணங்களுடன் தவறாக தொடர்புடையவர் எனக் கூறி மிரட்டிய அவர்கள், சோதனை நடத்தாமல் இருக்க பணம் செலுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அதற்கிணங்க, அந்த மருத்துவர் ஒரு கோடி 19 லட்சம் ரூபாய் அளவிற்கு பணத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு பரிமாறினார்.
பின்னர் சந்தேகம் எழுந்ததும், அவர் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவரின் மொபைல் எண்ணை அந்த நபர்கள் எப்படி கண்டுபிடித்தனர், அவரைப் பற்றி எவ்வளவு தகவல் வைத்திருந்தனர் என்பதற்கான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Thiruvarur CBI Fake call money robbery