'மதக் கலவரத்தைத் தூண்டும் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்' - புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அவமதித்து, மதரீதியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகக் கூறி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை மத்திய அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அன்பழகன், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்:

மத மோதல் போக்கு: எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசு திட்டமிட்டு மதரீதியில் மோதல் போக்கைக் கடைப்பிடித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு: திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராகப் பெரும்பான்மை இந்து சமூகத்துக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்ற அமர்வு அதனைத் தள்ளுபடி செய்த பிறகும், கடந்த இரண்டு நாட்களில் மூன்று முறை நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்சி அதிகார மமதையில் நீதிமன்றத்தின் உத்தரவை முதல்வர் ஸ்டாலின் காலில் போட்டு மிதித்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார்.

கலவரத்தைத் தூண்டும் செயல்: நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கின்ற விதத்திலும், தமிழகத்தில் மதரீதியில் கலவரத்தைத் தூண்டுகின்ற விதத்திலும் காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகளின் செயல்பாடு முதல்வரின் கைப்பாவையாக அமைந்துள்ளது.

அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: நீதிமன்ற உத்தரவை மீறி, தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, மக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டும் செயலில் ஈடுபட்டுள்ள திமுக அரசை மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

உபா சட்டம்: தீர்ப்பளித்த நீதிபதியைப் பற்றியும், அவரது தீர்ப்பைப் பற்றியும் தவறாக விமர்சனம் செய்து வரும் தமிழக நீதித்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுகவின் சில கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thirupurakundram issue DMK Govt ADMK Puducherry


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->