வைணவத்துக்கும், சைவத்துக்கும் இடையேயான யுத்தமே இராமாயணம் - திருமாவளவன்.! - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. திருமாவளவனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் மன்னரை இந்து அரசனாக சித்தரிக்கும் முயற்சி செய்கின்றனர் என பேசி பெரும் சர்ச்சையை உருவாக்கினார். 

அதனைத் தொடர்ந்து இவருடைய கருத்துக்கு ராஜராஜ சோழன் சைவர் தான் அவர் இந்து இல்லை என சீமான், திருமாவளவன், நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர் பேசி இருந்தனர்.

இதற்கு பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, வானதி சீனிவாசன் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இதனை கடுமையாக எதிர்த்தனர். ராஜராஜ சோழன் இந்து தான் என பல்வேறு விளக்கங்களை பாஜக தரப்பிலிருந்து வைக்கப்பட்டது.

 இந்த நிலையில் விசிக திருமாவளவன் நேற்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இந்து சமய அறநிலைத்துறை பெயரை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

அதன்படி, இந்து சமய அறநிலைத்துறையை சைவ சமய அறநிலைத்துறை என்றும்! வைணவ சமய அறநிலைத்துறை என்றும்! மாற்ற வேண்டும்" தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வைணவத்துக்கும், சைவத்துக்கும் இடையேயான உருவகக்காப்பியமே இராமாயணம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் 'வைணவத்துக்கும், சைவத்துக்குமிடையிலான யுத்தத்தின் உருவகக் காப்பியமே இராமாயணம் எனவும் புரிந்து கொள்ளலாம். இராமன் வைணவத்தின் அடையாளம். இராவணன் சைவத்தின் அடையாளம். இராமன் தூயன். இராவணன் தீயன். இராமனுக்கு வெற்றி. இராவணனுக்கு அழிவு. அப்படியெனில், வைணவம் வென்றது.சைவம் வீழ்ந்தது' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan speech about ramayanam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->