திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு.. திமுகவுக்கு எதிராக காய் நகர்த்திய திருமாவளவன்? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளதால், அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. 

குறிப்பாக சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகன், உதயநிதி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக திமுகவினர் உதயநிதிகாக ஏராளமான விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் திடீரென நேற்று தமிழக முதலமைச்சரை சந்தித்த, திருமாவளவன் சென்னை மாநகராட்சி தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளார். திருமாவளவன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் வேட்பாளராக  போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும். 

உதயநிதி சென்னை மேயராக போட்டியிடக் கூடாது என்பதற்காக மறைமுகமாக திருமாவளவன் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் திமுக கூட்டணியில் தற்போது சலசலப்பு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan meet to eps


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal