அமித்ஷாவா..? பழனிசாமியா..? ஒரே குழப்பத்தில் திருமாவளவன்..!
Thirumavalavan is confused about whether Amit Shah or Palaniswami will lead the AIADMK and BJP alliance
'தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு உருவாக்கிய கூட்டணியை வழி நடத்துவது அமித்ஷாவா..? இ.பி.எஸ்., அவர்களா..? என கேள்வி எழுகிறது. இதற்கு எல்லம் அவர் தான் விளக்கம் சொல்ல வேண்டும்.' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளூரில் நிருபர்களை சந்தித்த அவர் இது குறித்து கூறியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்துவிட்டது. இனி ஏன் அ.தி.மு.க., தனியாக கூட்டணி அமைக்க போகிறது. தனி கூட்டணி அமைப்பது என்றால், அவசரமாக கூட்டணியை அமைத்து இருக்க மாட்டார்கள் என்று பேசியுள்ளார்.
அத்துடன், இன்னும் தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்பே அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்து விட்டது என கூறிவிட்டார்கள். அவர்களுக்கு என்ன அழுத்தமோ.. என்ன காரணமோ.. மிகவும் முன்கூட்டியே கூட்டணி அறிவிக்கும் நிலை அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் அதன் பின்னணியை விளக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க., தலைவருக்கு தான் உண்டு என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஏன் என்று தெரியாது என்றும், பா.ம.க.,வின் பிரச்சினை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும், நாங்கள் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். அதில் தொடர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், 'அ.தி.மு.க., பா.ஜ., முன்பு கூட்டணியில் இருந்ததாக அமித்ஷா கூறி வருகிறார். இக்கூட்டணியை தே.ஜ., கூட்டணி என்றும், கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் எனவும் அமித்ஷா சொல்கிறார். இதற்கு அ.தி.மு.க., தலைவர்கள் குறிப்பாக இ.பி.எஸ்., தான் விளக்கத்தை , தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பா.ஜ., தலைமையில் கூட்டணியா, அல்லது, அ.தி.மு.க., தலைமையில் கூட்டணியா என்ற கேள்வி எழுகிறதாகவும், அறிவிக்க வேண்டியவர் யார்..? அவர் மத்திய உள்துறை அமைச்சராக இருக்கலாம். அ.தி.மு.க., மூத்த தலைவர்களாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதோடு. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு உருவாக்கிய கூட்டணியை வழி நடத்துவது அமித்ஷாவா..? இ.பி.எஸ்., அவர்களா என கேள்வி எழுகிறதாகவும், இதற்கு எல்லாம் அவர்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும் என்றும் நிருபர்களிடம் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Thirumavalavan is confused about whether Amit Shah or Palaniswami will lead the AIADMK and BJP alliance