'நான் தடுமாறுவதாக உளவியல் ரீதியில் பலவீனப்படுத்த பார்க்கிறார்கள்; என் மீது இருக்கும் நம்பிக்கையை சிதைக்கப் பார்க்கிறார்கள்'; திருமாவளவன் ஆதங்கம்..! - Seithipunal
Seithipunal


'திமுக, மதிமுக என நம்மை விமர்சிக்கும் யாரையும் சமூக வலைதளங்களில் விமர்சிக்காதீர்கள். எல்லா புயலிலும் நான் கட்டுக்கோப்பாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், திருமாவளவன் மீது இருக்கும் நம்பிக்கையை சிதைக்கப் பார்க்கிறார்கள்'' விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் கூறியதாவது;

தமிழகத்தில் இரண்டு அணிகளாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்வதே அரசியல் கலாச்சாரமாக இருந்தது. இதனால்  மூன்றாவதாக ஓர் அணி தோன்றினாலும் அதற்கு வலு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டதோடு, அதனால், மும்முனைப் போட்டி என்ற சூழல் உருவாகாமல், திமுக - அதிமுக என இருமுனைப் போட்டியே இங்கு நிலவியது என்று தெரிவித்ததோடு,தமிழகத்தில் வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், சீமான், விஜய் என மூன்றாவது அணி தொடர்ந்து இருந்து வந்தது என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் இரு துருவ அரசியல் வலிமையாக இருப்பதால் தேசிய கட்சிகளால் இங்கே வலிமை பெற முடியவில்லை என்றும், அதேபோல வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், சீமான் போன்றோராலும் வெல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இப்போது விஜய் 35 சதவீத வாக்குகளை பெற்று வலுவான சக்தியாக மாறியுள்ளார். இதனால் இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மூன்றாவதாக ஒரு சக்தி வலுவாக வந்ததால், இரு திராவிட கட்சிகளுக்கும் இருந்த வாக்குகள் அந்தப் பக்கம் சென்றுள்ளன. என்றும், எல்லா சமூகத்தை சேர்ந்தவர்களும் தவெகவுக்கு வாக்களித்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால், சிலர் திட்டமிட்டு விசிக வாக்குகள்தான் தவெகவுக்கு மாறியுள்ளதாக ஒரு தோற்றத்தை உருவாக்க பார்க்கின்றனர் என்றும், விசிகவுக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என காழ்ப்புணர்ச்சி கொண்ட கூட்டம் இதனை தொடர்ந்து பரப்புகின்றதாக தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

திருமாவளவனால் தான் திமுக கூட்டணி வென்றது என்ற ஒரு கருத்துருவாக்கம் இருந்தது என்றும், கடந்த 2016-க்கு பிறகு நடந்த தேர்தல்களில் திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றிபெற்று வந்தது. அப்போது விசிகவினர், தலித் மக்கள் திமுக கூட்டணியை வெகுவாக ஆதரிக்கிறார்கள், அதனால்தான் இந்த வெற்றி என ஒரு கருத்துருவாக்கம் இருந்தது என்று கூறியதோடு, இதனை உடைக்கவே விசிக வாக்குகள் எல்லாம் தவெக பக்கம் சென்று விட்டதாகவும், அதனால்தான் திமுக தோற்றது என ஒரு தவறாக கருத்தை திட்டமிட்டு பரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தலித் மக்கள் எல்லாம் சினிமா மோகத்தில் தவெகவுக்கு வாக்கு போட்டதாக கூறுகிறதாகவும், அதாவது, இந்த மக்கள் அரசியல்படுத்தப்படாமல் இருப்பது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார். முன்பு காசு வாங்கி கொண்டு தலித் மக்கள் வாக்கு போட்டதாக சொன்னார்கள். இப்போது தவெக வாக்குக்கு காசே கொடுக்காமல் வென்றுவிட்டார்கள். எனவே அந்த குற்றச்சாட்டை சொல்ல முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று திமுக 59 இடங்களில் திமுக வெற்றி பெறுவதற்கு விசிகவின் பங்களிப்பு மகத்தானது என்றும், ஆனால், அதனை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் விசிகவுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன், நாங்கள் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை என்றும், அவர்களே முதல்வர், துணை முதல்வருக்கு பரிந்துரைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இப்போது நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கிறார்கள் என்றும், இது சிலருக்கு வயிற்றெரிச்சலாக உள்ளதாகவும், நான் சொல்லித்தான் பல அதிகாரிகளை நியமித்ததாக சொல்கிறார்கள். சாதி அடிப்படையில் நான் இதுவரை எந்த அதிகாரிகளையும் அணுகியது கிடையாது என்றும், நான் மக்களுக்காகவே அரசியல் நடத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், விசிகவும், திருமாவளவனும் குறிவைக்கப்படுவது உள்நோக்கம் கொண்ட செயல் என்றும், தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விசிக இருக்கிறது என்பதால் இப்படி செய்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், நீங்கள் விஜய்யை ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என சொன்னீர்களே என என்னிடம் கேட்கிறார்கள். அதே கேள்வியை, ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என உங்களை சொன்ன திருமாவளவனிடம் ஏன் ஆதரவு கேட்டீர்கள் விஜய்யிடம் கேட்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

திமுகவுடன் நட்பு தொடரும் என நான் சொன்னதை விமர்சிக்கிறார்கள் என்றும், தீய சக்தி என சொன்ன விஜய், ஏன் ஸ்டாலினை சந்தித்தார் என கேட்பீர்களா? விஜய்யை ஸ்டாலின் ஏன் வரவேற்றார் என கேட்பார்களா? இப்படி எதையும் கேட்காமல் நான் குழப்புவதாக சொல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தவெகவுக்கு ஆதரவளிக்கும் போது ஸ்டாலினிடம் நட்பு அடிப்படையில் சென்று சொன்னேன். அமைச்சரவையில் சேரும்போது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சில மூத்த அமைச்சர்களிடம் சொன்னேன். இது ஒரு நாகரிக அணுகுமுறை. பதவி கிடைத்தவுடன் எல்லோரையும் உதறிவிட முடியுமா என நான் கேட்டதில் என்ன தவறு? என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திருமாவளவன் தடுமாறுகிறார் என உளவியல் ரீதியில் நம்மை (விசிக) பலவீனப்படுத்த பார்க்கிறார்கள் என்று தனது வேதனையை பகிர்ந்துள்ளதோடு, தான்பகை உணர்ச்சியை விரும்பவில்லை என்றும், யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை எனவும், கூறியுள்ளார். அத்துடன், திமுக, மதிமுக என நம்மை விமர்சிக்கும் யாரையும் சமூக வலைதளங்களில் விமர்சிக்காதீர்கள். எல்லா புயலிலும் நான் கட்டுக்கோப்பாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், திருமாவளவன் மீது இருக்கும் நம்பிக்கையை சிதைக்கப் பார்க்கிறார்கள் எனத் தெரிவித்த்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan fears that they are trying to weaken me psychologically by making me stumble


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->