அதிமுக-பாஜக கூட்டணி விரிசல்; தற்காலிக அரசியல் நாடகம்! - திருமாவளவன் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


மறைந்த அதிமுக தலைவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அறிவித்தார். இது அதிமுகவின் முடிவு என செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுகவின் இந்த அறிவிப்பானது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டும் அல்லாது தேசிய அளவிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதிமுக தரப்பின் இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்று இருந்தார்.

இந்த நிலையில் இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "அதிமுக பாஜக இடையை ஏற்பட்டுள்ள விரிசல் தற்காலிக அரசியல் நாடகம் தான். இந்த இடைக்காலம் முரண்கள் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக மனதில் பட்டதை எல்லாம் அண்ணாமலை பேசி வருகிறார். 

தன்னை பற்றி விவாதிக்க வேண்டும் என்ற உளவியல் சிக்கல் அண்ணாமலைக்கு உள்ளது. பாஜகவை சுமக்க சுமக்க அதிமுகவின் வாக்கு வங்கியை மேலும் இழக்க நேரிடும்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan criticized rift in AIADMK BJP alliance is temporary political drama


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->