அதிமுக + விசிக கூட்டணி? உறுதிப்படுத்திய திருமாவளவன்!!
Thiruma confirm VCK not withdraw DMK alliance
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மண்டல வாக்கு சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்று கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி விடுதலை சிறுத்தைகள் முழுமையாக உழைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்று விட்டால் மட்டும் போதாது. தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும் உழைக்க வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சி வரக்கூடாது என்பதை நமது சப்தம். இந்தியாவை இந்து நாடாக பிரகடனம் படுத்த வேண்டும் என்ற பாஜகவின் நோக்கத்திற்கு அம்பேத்கரின் அரசியல் அமைப்புச் சட்டம் தடைக்கல்லாக உள்ளது.

பாகுபாடுகளை எதிர்ப்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை. சமாதானத்தை பின்பற்றுவதுதான் மனுஸ்மிருதி. அதற்கு எதிரானது தான் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டம். நான் உடல்நிலை சரியில்லாத போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அதனை சில ஊடகங்கள் திரித்து திமுகவை பலமாக்குவதற்காக திருமாவளவன் கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய போவதாக வதந்திகள் பரப்பின" என உறுதிப்பட பேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
English Summary
Thiruma confirm VCK not withdraw DMK alliance