திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு.!
Thiripura assembly election today vote polling
திரிபுரா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
திரிபுரா மாநிலத்தின் 5 ஆண்டுகால பதவிக்காலம் வரும் மார்ச் 22 ஆகிய தேதி முடிவடைகிறது. இதனையடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திரிபுரா மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இனஞ ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.மேலும், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிர பிரச்சாரம் செய்தது.

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் பாஜக சார்பில் இந்திய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை.
இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் வருகின்ற மார்ச் 2ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
English Summary
Thiripura assembly election today vote polling