பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக அதிமுகவினர் சென்ற வேன் விபத்து.. பலர் காயம்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.

கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி (இன்று) நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து பொதுக்குழுவிற்கு தடை கோரி மனு தாக்கல் செய்து வந்தனர். அனைத்து மனு மீதும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு ஆதரவாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனுடைய அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. இன்று காலை 9.15 மணிக்கு திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக அதிமுக தொண்டர்கள் சென்ற வேன் மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த15 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The van in AIADMK went to participate in the general assembly met with an accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->