தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு காரணம் நிர்வாக சீர்கேடு தான்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசியதாவது,

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்புவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இலங்கை கடற்படையால் தினந்தோறும் ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

ஆனால் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் தலையிட்டால் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் கூட நடைபெறவில்லை. அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நம்முடைய மீனவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

மேலும் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மின்தடை என்பதே இல்லாமல் இந்தியா ஒரு மின் மிகை நாடாக மாறியிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு நிர்வாக சீர்கேடு தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The reason for the power cut in Tamil Nadu is the administrative disorder Central Internet Minister L. Murugan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->