பிப்ரவரி 1ந் தேதி பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்; மக்களவை சபாநாயகர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து மத்திய பட்ஜெட் பிப்ரவரி 01ந் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி 01 விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால், இந்தாண்டு பிப்ரவரி 01ந் தேதி பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்று குழப்பம் ஏற்பட்டது. 

இந்நிலையில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வழக்கம் போல் பிப்ரவரி 01-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது, பிப்ரவரி 1ந் தேதி காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என்றும்,  பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்க உள்ளதாகவும், முதல் நாளில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பட்ஜெட்டிற்கு முந்தைய நாளான ஜனவரி 31-ஆம் தேதி, நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியமானது என்பதால், அவையின் நடவடிக்கைகளைச் சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Lok Sabha Speaker has announced that the Union Budget will be presented in Parliament on February 1st


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->