இன்று 18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், எந்தெந்த விவகாரம் ஆலோசிக்கப்படலாம் !! - Seithipunal
Seithipunal


தற்போது புதிய 18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று ஆரம்பமாக உள்ளது, இந்த அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பதவியேற்பு விழாவும் அடங்கும். இந்த முதல் அமர்வின் போது, ​​தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும். 

மேலும் அதே நேரத்தில், மக்களவை சபாநாயகர் தேர்தல், NEET-UG மற்றும் UGC-NET ஆகியவற்றில் தேர்வு வினா தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து விவாதித்து வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை முட்டுக்கட்டை போட முயற்சிப்பதால், இந்த மக்களவை முதல் அமர்வு பரபரப்பாக இருக்கும் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு இந்த மக்களவை கூட்டம் முதல் அமர்வு பலமான பரிட்சையாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த முதல் மக்களவை அமர்வின் தொடக்கத்தில் தற்காலிக சபாநாயகரும் நியமிக்கப்பட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுதிமொழி மற்றும் பிரமாணம் செய்து வைப்பார். மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ பர்த்ருஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

அதன் பிறகு மஹ்தாப், மக்களவைத் தலைவரான பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவையின் உறுப்பினராகப் பதவியேற்பார். லோக்சபா சபாநாயகர் வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி  தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் அடுத்த நாள் ஜூன் 27 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

the first session of lok sabha will be started today


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->